வணிகம்

உயர்ந்தது பங்குசந்தை: சரிந்தது ரூபாய் மதிப்பு

உயர்ந்தது பங்குசந்தை: சரிந்தது ரூபாய் மதிப்பு

webteam

சரிவில் இருந்த இந்திய பங்குசந்தைகள், வாரத்தின் 2வது நாளான இன்று முன்னேற்றமடைந்தாலும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது. 

கடந்த சில நாட்களாக இந்திய பங்குசந்தைகளின் ஏற்ற இறங்கங்களில், சரிவின் விகிதமே அதிகரித்து காணப்பட்டது. அதன்படி கடந்த மாதம் இறுதியில் ஜப்பான், வடகொரியா இடையேயான போர் பதற்றம் அதிகரித்ததால், பங்கு சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து இந்த வாரம் இந்திய பங்கு சந்தைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. 
இந்நிலையில் வாரத்தின் 2வது நாளான இன்று இந்திய பங்குசந்தை சரிவில் இருந்து முன்னேற்றம் அடைந்துள்ளது. அதன்படி மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 78.72 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 23.85 புள்ளிகளும் உயர்ந்துள்ளது. இருப்பினும் இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிவடைந்து, அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பில் ரூ.64.18 ஆக உள்ளது.