வணிகம்

அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5% டூ 12.5% - உலக வங்கி கணிப்பு

அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5% டூ 12.5% - உலக வங்கி கணிப்பு

webteam

அடுத்த நிதியாண்டில் (2021 - 2022 ) இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதம் முதல் 12. சதவீதம் வரைக்குள் இருக்கும் என உலக வங்கி கணித்திருக்கிறது. தடுப்பூசி எந்த வேகத்தில் செயல்படுத்தப்படுகிறது என்பதை வைத்து இந்தியாவின் வளர்ச்சி இருக்கும். 10.1 சதவீதமாக இருக்கலாம் என உலக வங்கி தெரிவித்திருக்கிறது. நடுத்தர காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி 6 சதவீதம் முதல் 7 சதவீதமாக இருக்கும் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

2017-ம் நிதி ஆண்டில் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 8.3 சதவீதமாக இருந்தது. ஆனால், படிப்படியாகக் குறைந்து 2020-ம் நிதி ஆண்டில் 4 சதவீதமாக குறைந்தது. ஆனா,ல் 2021-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி எதிர்மறையில் ( 8.5 சதவீதம் சரிவு இருக்க கூடும்) இருந்தது. கொரோனாவின் தாக்கம் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஓர் ஆண்டுக்கு முன்பு நிச்சயமற்ற சூழல் இருந்தது. ஆனால், தற்போது பொருளாதாரம் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. வளர்ச்சிக்கு தேவையான முதலீடுகளை செயய் வேண்டி இருப்பதால் 2022-ம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 10 சதவீதத்துக்கு மேல் இருக்கும்.

'கடந்த ஆண்டில் கொரோனா நோயைப் பற்றியும் முழுமையாக தெரியவில்லை, தடுப்பூசி குறித்த தெளிவும் இல்லை. அதனால் நுகர்வு கடுமையாக சரிந்தது. ஆனால், தற்போது நிச்சயமற்ற சூழல் மிகவும் குறைந்திருக்கிறது.

பொதுவாக இவ்வளவு இடைவெளியில் வளர்ச்சி இருக்கும் என கணிக்கமாட்டோம். மிகச் சில இடைவெளி மட்டுமே இருக்கும். ஆனால், தற்போது 5 சதவீத அளவுக்கு இடைவெளி இருப்பதற்கு புறச்சூழலே காரணம். அதனாலேயே ஜிடிபியை கணிப்பது கடினமாக இருக்கிறது' என உலக வங்கி தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த தென் கிழக்கு ஆசியாவின் வளர்ச்சி 7.2 சதவீதமாக (2021-ம் ஆண்டு) இருக்கும் என உலக வங்கி கணித்திருக்கிறது. அடுத்த நிதி ஆண்டில் ஒட்டுமொத்த தென் கிழக்கு ஆசியாவின் வளர்ச்சி 4.4 சதவீதமாக இருக்கும் என்றும் உலக வங்கி தெரிவித்திருக்கிறது.

'கொரோனாவின் இரண்டாம் அலை அல்லது உருமாறிய கொரோனா வைரஸ் ஆகியவை இயல்பாக இருக்க கூடியவைதான். அரசுகளும் இதனை எப்படி கையாள வேண்டும் என கற்றுக்கொண்டிருக்கும். ஒட்டுமொத்த லாக்டவுனை விட எந்த பிராந்தியத்தில் அதிகமாக இருக்கிறதோ, அதனை கட்டுப்படுத்துவதுதான் சிறந்தது. வைரஸ் வேகமாக பரவினாலும் ஓர் ஆண்டுக்கு முன்பு இருந்த சூழ்நிலைக்கு செல்ல மாட்டோம்' என உலக வங்கி தெரிவித்திருக்கிறது.