நாட்டின் ஆயுதங்கள் இறக்குமதி 33 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தனியார் ஆய்வு நிறுவனத்தின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு மற்றும் 2016 முதல் 2020 ஆண்டு வரையிலான காலங்களில் ஆயுதங்கள் இறக்குமதி 33 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச அளவில் ஆயுதங்கள் இறக்குமதியில் சவூதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
2016-ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலங்களில் சர்வதேச அளவிலான இறக்குமதியில் இந்தியா 9.5 சதவிகிதம் அளவிற்கு ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் இறக்குமதி செய்வதில் உள்ள சிக்கல் மற்றும் அவற்றை கொள்முதல் செய்வதற்கு நீண்ட காலங்கள் ஆவது போன்ற காரணங்களால் இறக்குமதி குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.