வணிகம்

இந்தியாவில் குடும்பங்களில் அதிகரித்த கடன்; குறைந்துபோன சேமிப்பு: ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை

இந்தியாவில் குடும்பங்களில் அதிகரித்த கடன்; குறைந்துபோன சேமிப்பு: ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை

Veeramani

கொரோனா பொது முடக்கத்தால் இந்தியாவில் குடும்பங்களின் கடன் அதிகரித்துள்ள நிலையில் சேமிப்புகள் வெகுவாக குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்தாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான குடும்பங்களின் கடன் மற்றும் சேமிப்புகள் குறித்த ஆய்வறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி 3 மாத கால கட்டத்தில் குடும்பங்களின் கடன் அதிகரித்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் 37.1% ஆகும் என கூறியுள்ளது.

இதே போல சேமிப்புகளும் குறைந்துள்ளதாகவும் அது ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் 10.4% ஆக இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. பொது முடக்கம் காரணமாக கோடிக்கணக்கானோர் வேலை இழந்ததும் ஊதியங்கள் குறைக்கப்பட்டதுமே இந்நிலைக்கு காரணம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனினும் இந்த போக்கு தற்காலிகமானதே என்றும் அடுத்து வந்த மாதங்களில் நிலைமை மாறியிருந்ததாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.