வணிகம்

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

Rasus

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சட்டதிட்டங்களின் படி வருமானம் பெரும் தனிநபர், வருமான உச்ச வரம்பிற்கு மேல் தங்கள் வருமானம் இருந்தால் வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை வரியாக செலுத்த வேண்டும். வருமான உச்ச வரம்புக்குள் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியது கட்டாயம் இ்ல்லை. ஆனால் வருமானம் குறித்த தகவல்களை தாக்கல் செய்து வைத்திருக்க வேண்டும்.

அதன்படி இந்தாண்டு வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதியே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏராளமானோர்கள் தங்களது வருமான வரி கணக்கினை தாக்கல் செய்து வந்தனர். இந்நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.