வணிகம்

புத்துயிர் பெறும் பொருளாதாரம்? சுங்கவரி கட்டண வசூல்  82% எட்டியது!

புத்துயிர் பெறும் பொருளாதாரம்? சுங்கவரி கட்டண வசூல்  82% எட்டியது!

JustinDurai

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்கவரி வசூல் அதிகரித்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு முன்பாக இருந்த 72 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும்,  இது நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்  குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால் கமர்சியல் மற்றும் கனரக வாகனங்கள் மூலம் பெறப்பட்ட சுங்க வரியானது இதற்கு முந்திய காலமான 82 சதவிகிதத்திலிருந்து 91 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனியார் வாகன போக்குவரத்து பெரிதாக இல்லை.  தேசிய நெடுஞ்சாலை துறையின் 679 டோல்கேட்களில்  தற்போது 571 டோல்  மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மார்ச் முதல் வாரம் ஒவ்வொரு டோல்கேட்டிலும் சராசரியாக 57.1  லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.  முந்தைய காலங்களில் இருந்த பணப் பரிமாற்றங்களை விட இது குறைவு என்றாலும் கனரக மற்றும் வணிக வாகனங்களால் பெறப்பட்டு  வந்த சுங்கவரி வசூல்கள்  அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  சாதாரண காலங்களில் கனரக வாகனங்கள் மூலம் பெறப்படும் சுங்கவரி ஆனது 70 சதவிகிதமாக மட்டுமே இருந்தது.

ஃபாஸ்டாக்  மூலம் பெறப்பட்ட சுங்கவரி  வசூல்களும் இதே மாதிரியான வளர்ச்சியைக் காட்டுகின்றது.  கடந்த புதன்கிழமை மட்டும் 83% சுங்கவரி கட்டணங்கள் ஃபாஸ்ட் டேக்  மூலம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்பது நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது.

கிடைத்துள்ள தகவல்களின் படி,தேசிய நெடுஞ்சாலைத்துறை மாநில அரசு நெடுஞ்சாலை அமைச்சகம்  கீழ் செயல்படும் 698 டோல் மையங்களிலிருந்து, பொது முடக்கத்திற்கு முந்தைய காலங்களில்,  சுங்கவரி கட்டணங்களின்  வசூல் 66.6 கோடிகளாகவும்,  கடந்த புதன்கிழமை 55.4 கோடி  என்றும்  இது டோல் மையம் மற்றும் ஃபாஸ்ட் டேக்  இரண்டின் மூலம் பெறப்பட்ட சுங்கவரி ஆகும் என கூறப்பட்டுள்ளது.