வணிகம்

IMPS பண பரிவர்த்தனை வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்வு

IMPS பண பரிவர்த்தனை வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்வு

JustinDurai
IMPS பண பரிவர்த்தனை வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி.
இணையதள வங்கி சேவைகளில் பணப் பரிவர்த்தனை செய்ய NEFT, IMPS, RTGS சேவைகள் உள்ளன. இந்நிலையில் இணையதள வங்கி சேவையை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் இன்று ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தில் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி IMPS பணப் பரிமாற்ற சேவையில் ஒரு நாளுக்கு அதிகப்படியாக 2 லட்சம் ரூபாய் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படும் நிலையில், இந்த வரம்பு 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படும் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த் தாஸ் அறிவித்துள்ளார்.
 
 IMPS மற்றும் NEFT பணப் பரிமாற்றத்தை 24 மணி நேரமும் செய்யச் சில மாதங்களுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது பணப் பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.