வீட்டுக்கடன் பிரிவில் உள்ள முக்கியமான நிறுவனம் ஹெச்டிஎப்சி. இதைக் குறிப்பிட காரணம், இந்த நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வீட்டுக்கடன்களை வழங்கி இருக்கிறது.
ஹெச்.டி.எப்.சி. நிறுவனம் சார்பில் கடந்த நிதி ஆண்டில் ரூ.1.55 லட்சம் கோடி அளவுக்கு மட்டுமே வீட்டுக்கடன் வழங்கப்பட்ட நிலையில், நடப்பு நிதி ஆண்டில் அது 30 சதவீதத்துக்கும் மேல் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்னணியில் சில மாநிலங்களில் பத்திரபதிவுக்கு சலுகை, வீடுகளின் விலையில் பெரிய ஏற்றம் இல்லாதது, குறைந்த வட்டி ஆகிய காரணங்களால் வீட்டுக்கடனுக்கான தேவை உயரந்திருப்பது ஆகியவை உள்ளன. இதனால் வீடுகளை வாங்குவதற்கு இதுவே சரியான தருணமாக பலரும் கருதுகின்றனர் என்றும், அதுவே வீட்டுக்கடனுக்கான வெளியை அதிகப்படுத்தியுள்ளது என்றும் பார்க்கப்படுகிறது.
இவை தவிர கோவிட் காரணமாக உருவான தேக்கநிலை காரணமாக, தற்போது திடீர் தேவையாக கடன் பெறும் சூழல் பலருக்கும் உருவாகவில்லை என்றும், மக்களுக்கு அவர்களின் கடன் தேவை நிலையாக அடுத்தடுத்த ஆண்டுகளில் நீடிக்கும் என்றும் ஹெச்டிஎப்சி தெரிவித்திருக்கிறது. அதேநேரம் மெட்ரோ, சிறு நகரங்கள் என அனைத்து இடங்களிலும் கடன் தேவை உயர்ந்திருக்கிறது. குறிப்பாக ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான பிரிவில் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர் என ஹெச்டிஎப்சி தெரிவித்திருக்கிறது.
சமீபத்திய செய்தி: `நட்பு பட்டியலில் இல்லாத நாடுகள், ரூபிளில் தொகையை செலுத்துங்க...’- அதிபர் புடின் அதிரடி