வணிகம்

எச்டிஎப்சி மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளின் கடன் வட்டி விகிதம் குறைப்பு..!

எச்டிஎப்சி மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளின் கடன் வட்டி விகிதம் குறைப்பு..!

webteam

புத்தாண்டு உரையின் போது பிரதமர் மோடி வங்கிகளின் வட்டி விகிதத்தை குறைக்க அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, எச்டிஎப்சி மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.

முன்னதாக எஸ்பிஐ வங்கி தனது வட்டி விகிதத்தை 8.9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைத்தது. அதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கி, வட்டி விகிதத்தை 8.20 சதவீதமாக குறைத்தது.

இதைதொடர்ந்து, தற்போது எச்டிஎப்சி மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளும் கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. எச்டிஎப்சி வங்கி கடன் விகிதத்தை 0.90 சதவீதம் வரை குறைத்துள்ளது. அதன்படி, தற்போது எச்டிஎப்சி வங்கியில் ஒரு வருட கடனுக்கான வட்டி 8.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.