வணிகம்

பழைய நகையை விற்றாலும் ஜிஎஸ்டி; ரிப்பேர் பார்த்தாலும் ஜிஎஸ்டி..!

webteam

பழைய நகைகளை விற்கும் போது அவற்றுக்கு 3 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய வருவாய்துறை செயலாளர் ஹஷ்முக் அதியா தெரிவித்துள்ளார்.

பழைய நகைகளை விற்கும் போது அவற்றுக்கு 3 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். எனினும் பழைய நகைகளை கொடுத்து விட்டு புதிய நகை வாங்கும் போது புதிய நகைக்கு விதிக்கப்படும் வரியில் பழைய நகைக்கான 3 சதவிகித வரி கழித்துக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பழைய நகைகளில் மாற்றம் ஏதும் செய்து தர வேண்டியிருப்பின் ஜாப் ஒர்க் என்ற வகையில் 5 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.