வணிகம்

தங்கத்துக்கு 3 சதவீத வரி: ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு

தங்கத்துக்கு 3 சதவீத வரி: ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு

webteam

தங்கத்துக்கு 3 சதவீத வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

மேலும், ரூ.500க்குக் குறைவான விலை கொண்ட காலணிகளுக்கு 5 சதவீதமும், அதற்கு மேற்பட்ட விலை கொண்ட காலணிகளுக்கு 18 சதவீதம் வரி விதிப்பதும் என்றும் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதேபோல, பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களால் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு வகைகள் மற்றும் சோலார் பேனல் ஆகிய பொருட்களை 5 சதவீத வரி விதிப்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. 
ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பிஸ்கட்டுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது. ஜவுளி பொருட்களுக்கான வரிவிதிப்பைப் பொறுத்தவரை ரூ.1,000 என்ற விலைக்குக் குறைவான ஜவுளி பொருட்களுக்கு 5 சதவீத வரியும், அதற்கு மேலான விலை கொண்ட ஜவுளி பொருட்களுக்கு 12 சதவீதம் வரியும் விதிக்கப்பட இருக்கிறது. சுதந்திரத்துக்கு பிறகான நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் தங்கம், காலணிகள் உள்ளிட்ட 6 பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிப்பது என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொண்ட ஜிஎஸ்டி கவுன்சிலின் 15ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டங்களில் சுமார் 1,200 பொருட்களுக்கான வரி விதிப்பு குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.