வணிகம்

டொயோட்டா கார்களின் விலைக் குறைப்பு: ஜி.எஸ்.டி. எதிரொலி..!

டொயோட்டா கார்களின் விலைக் குறைப்பு: ஜி.எஸ்.டி. எதிரொலி..!

webteam

ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறை அமலானதையடுத்து டொயோட்டா நிறுவனம் தங்கள் கார்களின் விலையை 2.17 லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது. 

நாடு முழுதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி. அமலாகியுள்ள நிலையில், வரி குறைப்புக்கு ஏற்ப கார் நிறுவனங்கள் விலை குறைப்பை அறிவித்து
உள்ளன. அதன்படி நாட்டின் முன்னணி கார் நிறுவனமான டெயாயோட்டா நிறுவனம் 2.17 லட்சம் ரூபாய் வரை தனது நிறுவனத்தின் கார்கள் மீது விலை குறைப்பு அறிவித்துள்ளது. இது, கொரோலா அல்டிஸ், ஃபார்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா போன்ற கார் வகைகளுக்கு இந்த விலை குறைப்பு பொருந்தும்.

அதாவது, டொயோட்டா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் வழங்கப்படும் பல்வேறு வகைகளில் உள்ள ஒவ்வொரு மாடலுக்கும் விலை குறைப்பை அறிவித்துள்ளது. டொயோட்டா கார்கள் மற்றும் எஸ்.யு.வி.எஸ் உள்ளிட்ட கார்களுக்கு ஒவ்வொரு பகுதிக்கு ஏற்றாற்போல், வரி சதவீதம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதில், இந்தியாவில்   டொயோட்டா இன்னொவா க்ரிஸ்டா-விற்கு ரூ. 98,500 வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.யு.வி.கார்களுக்கு (குறிப்பிட்ட மாடல்களுக்கு) 43 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. டொயோட்டா ஃபார்சூனருக்க சுமார் 2.17 லட்சம் வரையும், டொயோட்டா கொரல்லா அல்டிஸ்-க்கு 92,500 ரூபாயும், எடியோஸ் 24,500 ரூபாய், எடியோஸ் லிபா ஹேட்ச்பேக் ரூ.10,500 வரையும் தள்ளுபடி வழங்கியுள்ளது. இதேபோல், ஜி.எஸ்.டி. வரி அமலால் ஒரு சில வகை சொகுசுகார்களின் விலை அதிகரித்துள்ளது.