வணிகம்

ஜி.எஸ்.டி: சோதனைச் சாவடிகளை மூடும் 22 மாநிலங்கள்

webteam

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு நாடு முழுவதும் அமலானதையடுத்து, தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா உட்பட 22 மாநிலங்கள் சோதனைச் சாவடிகளை மூடி வருகின்றன.

மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிஹார், உத்தரப் பிரதேசம், ஹரியானா, குஜராத், அஸாம், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் மற்றும் சில வட கிழக்கு மாநிலங்கள் சோதனைச் சாவடிகளை மூடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையில் பொருட்கள் பரிமாறப்படும்பொழுது, மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை செய்யப்படுவது நடைமுறை. இதனால் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதும், சரக்கு வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால், வாகன நெரிசலும், சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரித்து வந்தது.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியால், இந்த பிரச்னைகள் தீர்ந்துள்ளதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.