வணிகம்

ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வரிவசூல் புதிய உச்சம் : ரூ.1.13 லட்சம் கோடி

webteam

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.1.13 லட்சம் கோடி வரிவசூல் கிடைத்திருப்பதாக மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது முதல் மாதந்தோறும் இந்தியாவின் வரி வசூல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தின் வரிவசூல் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1.13 லட்சம் கோடி வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. 

இஹ்டில் சிஜிஎஸ்டி எனப்படும் மத்திய அரசு வரியாக ரூ.21,163 கோடியும், எஸ்ஜிஎஸ்டி எனப்படும் மாநில அரசு வரியாக ரூ.28,801 கோடியும் வசூலாகியுள்ளது. இதுதவிர ஐஜிஎஸ்டி எனப்படும் இருமாநில கூட்டு வரியாக ரூ.54,733 கோடியும், செஸ் வரியாக ரூ.9,168 கோடியும் வரியாக கிடைத்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் மொத்தம் ரூ.1.06 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி செய்யப்பட்டிருந்தது. இது கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற வரிவசூல் ரூ.92,167 கோடியை விட 15% ஆகும். இதேபோன்று கடந்த 2018, ஏப்ரல் மாதம் நடந்த ரூ.1,03,459 கோடியை விட இந்த வரும் 10% அதிக வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடன் 16% அதிகமாக ஜிஎஸ்டி வரிவசூல் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக மத்திய நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.