ஜிஎஸ்டி வரியின் செப்டம்பர் மாத வருவாய் கடந்த ஆண்டைவிட 2.67 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஜிஎஸ்டி வரியின் வருவாய் தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் 91,916 கோடியாக வந்துள்ளது. இது கடந்த 19 மாதங்களில் மிகவும் குறைந்த ஜிஎஸ்டி வரி வருவாய் ஆகும். இது கடந்த ஆண்டு செப்டமபர் மாதம் வசூலான வருவாய் தொகையைவிட 2.67 சதவிகிதம் குறைந்தது.
ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்ட் வரியின் வருவாய் தொகை 98,202 கோடி ரூபாயாக இருந்தது. அப்போது இரண்டாவது முறையாக ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக பதிவாகியது. அதற்கு முன்பு ஜூன் மாதமும் ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக வசூலாகி இருந்தது. இந்தச் சூழலில் தற்போது ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக ஜிஎஸ்டி வரி வருவாய் செப்டம்பர் மாதமும் ஒரு லட்சம் கோடிக்கும் குறைவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.