வணிகம்

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை அதிரடியாக உயர்த்திய மத்திய அரசு!

webteam

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த வரி உயர்வால் சில்லறை விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.10ம், டீசலுக்கு ரூ.13-ம் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கலால் வரி உயர்த்தப்பட்டாலும் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. கச்சா எண்ணெய் விலை குறைவினால் கிடைத்துள்ள லாபத்தில், எண்ணெய் நிறுவனங்கள் இந்த வரி உயர்வை சரிசெய்துகொள்ளும் என்று பெட்ரோட்லியத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.25ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50ம் உயர்த்தப்பட்டது.