வணிகம்

இறக்குமதி பொருள்களுக்கு வரி அதிகரிப்பு.. ஏசி, ஃப்ரிட்ஜ் விலை உயர்கிறது

இறக்குமதி பொருள்களுக்கு வரி அதிகரிப்பு.. ஏசி, ஃப்ரிட்ஜ் விலை உயர்கிறது

Rasus

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்கவும், நடப்புக் கணக்கு பற்றாக்குறையை குறைக்கவும் அத்தியாவசியம் அல்லாத பொருள்கள் சிலவற்றின் இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி 19 பொருள்களின் சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏர் கண்டிஷனர், ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் ஆகியவற்றின் சுங்க வரி 10 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக உயர்கிறது. கம்ப்ரசர் சுங்க வரி 7.5 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகவும், ஸ்பீக்கருக்கு சுங்க வரி 10-ல் இருந்து 15 சதவிகிதமாகவும் அதிகரிக்கிறது. காலணி, கார் டயர் ஆகியவற்றின் சுங்க வரியும் 5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

வைரம் மற்றும் நகைக்கல்லுக்கான சுங்க வரி 5-ல் இருந்து 7.5 சதவிகிதமாக அதிகரிக்கிறது. இறக்குமதி நகைக்கு வரி 15 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாகவும், ஷவர், சிங்க், வாஷ்பேசின் ஆகியவை 10-ல் இருந்து 15 சதவிகிதமாகவும் உயர்கின்றன. பிளாஸ்டிக் பெட்டி, பாட்டில், சமையலறை பிளாஸ்டிக் பொருள்கள், அலுவலக எழுதுபொருள், வளையல், சூட்கேஸ் ஆகியவற்றின் சுங்க வரி 10 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருள் இறக்குமதிக்கு 5 சதவிகித வரி விதிக்கப்படுகிறது.