தங்கம் புதியதலைமுறை
வணிகம்

தங்கத்தின் விலை 4வது நாளாக தொடர் சரிவு; ஏற்றத்துடன் தொடங்கியது பங்கு சந்தை வர்த்தகம்!

Jayashree A

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமிற்கு 60 ரூபாய் குறைந்து, ரூ.6430 க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் சவரன் ரூ.480 குறைந்து 51,920 க்கு விற்பனையாகி வருகிறது.

அதே போல் 24 கிராம் சுத்த தங்கமானது கிராமிற்கு 63 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6815 க்கு விற்பனையாகிறது அதே போல் சவரன் 504 ரூபாய் குறைந்து 54016க்கு விற்பனையாகிறது. வெள்ளியில் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

இந்த விலை வீழ்ச்சியானது தங்கம் முதலீடாக வைத்திருப்பவர்களின் சொத்து மதிப்பை குறைத்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில் தங்கமானது அத்தியாவசியமான ஒன்று. ஆகவே தங்கத்தை ஒவ்வொரு மக்களும் விரும்பி வாங்குவர்.

மேலும், தங்களுக்கு பணத்தேவை என்று வரும்பொழுது இந்த தங்கத்தை வங்கிகளில் வைத்து பணத்தை பெற்றுவருவர். தற்பொழுது இந்த விலை குறைப்பால், தங்கத்தின் மீதான தொகையும் குறைவாக கிடைக்கும் என்பதால் மக்கள் மத்தியில் கவலை உள்ளது.

பங்கு சந்தை:

கடந்த வாரம் சரிந்து வந்த பங்குகள் இன்று மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது அதன்படி நிப்டி 24423 புள்ளிகளில் தொடங்கிய வர்த்தகமானது தற்பொழுது 230 புள்ளிகள் அதிகரித்து 24640 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதே போல் மும்பை வர்த்தகமான சென்செக்ஸ் 60158 புள்ளிகளில் தொடங்கப்பட்ட வர்த்தகமானது 600 புள்ளிகள் வரை அதிகரித்து 80690 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதே சமயம் வங்கி நிப்டியில் எவ்வித ஏற்றமுமின்றி 50500க்குள்ளாக வர்த்தகமாகி வருகிறது.