வணிகம்

தீபாவளியை முன்னிட்டு அதிகரித்த ஆடு விற்பனை: விற்பனை விலை உயந்ததால் ஆடுவளர்ப்போர் மகிழ்ச்சி

தீபாவளியை முன்னிட்டு அதிகரித்த ஆடு விற்பனை: விற்பனை விலை உயந்ததால் ஆடுவளர்ப்போர் மகிழ்ச்சி

webteam

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் சிறப்பு ஆட்டுச் சந்தையில் ஒரு ஆட்டிற்கு 1000 ரூபாய் வரை கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதாவது 6,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆடுகள், இப்போது 7,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

புதுக்கோட்டையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக எதிர்பார்த்த அளவு வியாபாரிகள் வரவில்லை என்றாலும் ஆடு விற்பனை கடந்த சில வாரங்களில் இல்லாத வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூடுபிடித்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மழையால் வியாபாரம் பாதிக்காத வகையில் நகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு ஆட்டுசந்தை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆட்டுச் சந்தையில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை விற்கவும் வாங்கவும் அதிக அளவு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமையான இன்று சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகின்றது. புதுக்கோட்டை நகரில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வழக்கமாக நடைபெறும் இடத்தில் ஆட்டுச்சந்தை நடைபெறாமல் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மழையால் பாதிக்காதவாறு நகராட்சி சார்பில் சந்தைப்பேட்டை பகுதியில் கூடாரம் உள்ள இடத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகின்றது.

புரட்டாசி மாதம் தொடர்மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில வாரங்களாக ஆடு விற்பனை இல்லாததாலும் போதிய அளவு விலை கிடைக்காததாலும் ஆடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்று வரும் சிறப்பு ஆட்டுச் சந்தையில் ஒரு ஆட்டிற்கு 1,000 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளதாகவும் மழையின் காரணமாக எதிர்பார்த்த அளவு வியாபாரிகள் வரவில்லை, ஆடுகளும் வரத்து குறைவாகவே உள்ள போதிலும் தீபாவளி பண்டிகை காரணத்தால் ஆடு விற்பனை கடந்த சில வாரங்களில் இல்லாத வகையில் தற்போது சூடுபிடித்துள்ளதால் ஆடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் வியாபாரிகளும் கடந்த சில வாரங்களாக ஆட்டிறைச்சி வியாபாரம் இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபாரம் நல்ல முறையில் இருக்கும் என்றும் இறைச்சி விலையும் அதிகரிக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.