இந்திய ஆட்டோமொபைல் சந்தை கடந்த சில ஆண்டுகளாகவே சரிவை எதிர்கொண்டு வருகிறது. முதலில் BS6 டிரான்சிஷன், கொரோனா பெருந்தொற்றால் அமல் செய்யப்பட்ட பொது முடக்கம், தொடர்ந்து செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறையால் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பு, கார் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை உயர்வு மாதிரியான காரணிகளால் வாகனங்களின் விலை ஏற்றம் கண்டது. அதனால் வாகன விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் சங்கம் (SIAM) தெரிவித்துள்ள தகவலின்படி நான்கு சக்கர, இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் என அனைத்து வாகன விற்பனையும் 23.49 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2022 பிப்ரவரியில் 1,328,027 வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. அதுவே 2021 பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 1,735,909 என இருந்துள்ளது.
மொத்தம் 2,62,984 நான்கு சக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. அதில் 1,33,572 பேஸஞ்சர் கார்கள் விற்பனையாகி உள்ளது. அதே நேரத்தில் SUV கார்களின் எண்ணிக்கை 5 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 27.25 சதவிகிதம் இரு சக்கர வாகனம் சரிவு கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.