வணிகம்

டிவிஎஸ் மோட்டார்ஸ் தலைவர் ஆகிறார் ரால்ஃப் ஸ்பெத்: இவர் பின்புலம் என்ன?

டிவிஎஸ் மோட்டார்ஸ் தலைவர் ஆகிறார் ரால்ஃப் ஸ்பெத்: இவர் பின்புலம் என்ன?

webteam

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் ரால்ஃப் ஸ்பெத் (Ralf Speth) இணைந்திருக்கிறார். இவர், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர். டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் வேணு ஸ்ரீனிவாசன் 2023-ம் ஆண்டு ஜனவரி அந்தப் பொறுப்பில் இருந்து விலக இருக்கிறார். அந்தப் பொறுப்பை கையாளுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவர் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர். ஜாகுவார் நிறுவனத்தில் 11 ஆண்டுகள் தலைமை பொறுப்பில் இருந்தார்.

ஆட்டோமொபைல் துறையில் பல முக்கியமான மாற்றங்கள் நடந்துவருகின்றன. புகை விதிமுறைகள் (எமிஷன்) மற்றும் எலெக்ட்ரிக வாகனங்கள் வேகம் எடுத்திருக்கின்றன. தவிர ராப் சர்வதேச அளவில் அனுபவம் பெற்றவர் என்பதால் டிவிஎஸ் மோட்டார்ஸ் சர்வதேச அளவிலான திட்டங்களை வைத்திருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இயக்குநர் குழுவில் குவோக் மெங் ஜியாங் (Kuok Meng Xiong) நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஆசியாவின் முக்கியமான முதலீட்டு நிறுவனமான கே3 வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் இவர். இந்த நிறுவனம் செய்திருந்த பல முதலீடுகள் யுனிகார்ன் (100 கோடி டாலர் சந்தை மதிப்பை கொண்ட நிறுவனங்களை யுனிகார்ன் நிறுவனம் என்று அழைப்பார்கள்) நிலையை அடைந்திருக்கின்றன.

தற்போது டிவிஎஸ் நிறுவனத்தின் 33 சதவீத வருமானம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கிறது. இதனை 50 சதவீதமாக உயர்த்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருக்கிறார் ரால்ஃப் ஸ்பெத். அதே டாடா சன்ஸ் நிறுவனத்தில் டிவிஎஸ் குழுமத்தின் இயக்குநர் வேணு ஸ்ரீனிவாசனும் இயக்குநராக இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. 1980-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது ரூ.27,000 கோடி மதிப்பிலான நிறுவனமாக திகிழ்கிறது.