வணிகம்

ஆன்லைன் விற்பனையில் போட்டி போடும் அமேசான் பிளிப்கார்ட்

ஆன்லைன் விற்பனையில் போட்டி போடும் அமேசான் பிளிப்கார்ட்

webteam

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும் புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து விற்பனைப் போரைத் தொடங்கியுள்ளன. இதனால் ஆன்லைன் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் நாட்டின் முன்னணி ஆன்லைன் விற்பனை நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன. பொதுமக்களும் பண்டிகை நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் தங்களுக்கு பிடித்தமான பொருட்கள், உடைகள் என பலவற்றை ஆன்லைன் மூலம் வாங்கி மகிழ்கின்றனர். தற்போது புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும், இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் ஆன்லைன் விற்பனையாளர்கள் அவ்வப்போது பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் “பிளிப்கார்ட்” அதன் 10 வது ஆண்டை நிறைவு செய்வதால் “Big 10” என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் மே 14 முதல் 18 தேதி வரை விற்பனையில் 80 சதவிகிதம் தள்ளுபடி அளிப்பதாக சலுகையை அறிவித்துள்ளது. இதற்கு போட்டியாக தற்போது அமேசான் மே மாதம் 11 ஆம் தேதி முதல் மே 14 ம் தேதி வரை Great India Sale என்ற விற்பனை சலுகையை அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய இரு நிறுவனங்களும் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.