ஜூன் 1ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைக் கட்டணம் உயர்த்தப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகள் பலவும் இந்தியாவிற்கான விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. தற்போது இந்தியாவிற்குள் மட்டுமே குறிப்பிட்ட விமான சேவைகள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
இதனால் ஜூன் 1ஆம் தேதிமுதல் உள்நாட்டு விமான சேவைக் கட்டணம் உயர்த்தப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு விமானக் கட்டணத்தில் குறைந்தபட்ச வரையறை 13%லிருந்து 16%ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் விமான சேவை முடங்கி வருவாய் பாதிக்கப்பட்டிருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு உதவவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.