வணிகம்

விவசாய, உணவு பொருட்கள் ஏற்றுமதி : அரசு சார்பில் ஆன்லைன் பயிற்சி

விவசாய, உணவு பொருட்கள் ஏற்றுமதி : அரசு சார்பில் ஆன்லைன் பயிற்சி

webteam

விவசாய மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி குறித்து அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நாளை ஆன்லைனில் பயிற்சி எடுக்கப்படுகிறது.

தமிழக அரசின் சார்பில் சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சிகள் இலவசமாகவோ அல்லது பயிற்சிகளுக்கு ஏற்றாற்போல கட்டணங்கள் வசூலிக்கப்பட்டோ அளிக்கப்படுகின்றன.

அந்த வகையில் நாளை வேளாண் மற்றும் உணவுப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள் / வேளாண் தயாரிப்பு ஏற்றுமதியாளர்களுக்கான ஏற்றுமதி ஊக்கத்திட்டங்கள், மதிப்பு கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. அத்துடன் ஏற்றுமதி வர்த்தகம் மற்றும் துணை நிறுவனங்களுக்கு பதிவுகள் செய்வது குறித்தும், ஏற்றுமதி விலை, கட்டண முறைகள் மற்றும் ஏற்றுமதிக்கான ஆவணங்கள் குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

ஜூம் செயலி வாயிலாக ஆன்லைன் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த பயிற்சி நடைபெறவுள்ளது. இதற்காக ரூ.2000 கட்டணம் வசூலிக்கப்படுகிற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் பங்கேற்க 94445 56099 மற்றும் 94445 57654 ஆகிய தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனப்பட்டுள்ளது.