வணிகம்

பி.எஃப் தொகைக்கு வட்டி குறைய வாய்ப்பு

Rasus

நடப்பு நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் தொகைக்கு வட்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக ஈபிஎஃப்ஓ(EPFO) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். கடந்த நிதியாண்டான 2016-17-ல் பிஎஃப் தொகைக்கு 8.65 சதவிகித வட்டி, தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அது நடப்பு நிதியாண்டில் குறைய வாய்ப்புள்ளதாக டெல்லியில் ஈபிஎஃப்ஓ(EPFO) அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நிதிச் சந்தையில் வங்கி டெபாசிட் வட்டி மற்றும் கடன் பத்திரங்களுக்கான வட்டி குறைந்திருப்பதால், பிஎஃப் சந்தாதாரர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வட்டியை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.