வணிகம்

"அமேசான், ஃப்ளிப்கார்ட் மீதான புகாரை விசாரிக்கிறோம்"- பியூஷ் கோயல்

"அமேசான், ஃப்ளிப்கார்ட் மீதான புகாரை விசாரிக்கிறோம்"- பியூஷ் கோயல்

jagadeesh

விதிகளை மீறி சலுகைகள் அறிவிப்பதாக அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீது, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு புகார் அளித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பண்டிக்கைக்கால விற்பனையில், இந்நிறுவனங்கள் இந்திய வர்த்தக விதிகளுக்கு மாறாக, தள்ளுபடிகளை அறிவித்ததாக மத்திய வர்த்தக அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் விதிகளை மீறி தள்ளுபடி அளித்து விற்பனை செய்வதாக எழுந்துள்ள புகார் ‌குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும், இந்நிறுவனங்கள் விதிகளை மீறியிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். பண்டிகைக்காலத்தை முன்னிட்டு அமேசான், ஃப்ளிப்கா‌ர்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் விழாக்கால சலுகை விற்பனையை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.