வணிகம்

உலக பணக்காரர்கள் பட்டியல்: அம்பானியை பின்னுக்குத் தள்ளிய டெஸ்லா நிறுவனர்!

உலக பணக்காரர்கள் பட்டியல்: அம்பானியை பின்னுக்குத் தள்ளிய டெஸ்லா நிறுவனர்!

webteam

உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானியை பின்னுக்குத் தள்ளி டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 7வது இடத்தை பிடித்துள்ளார்

ஜியோவின் பங்குகளை ஃபேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈகுயிடி பங்குதாரர்கள், கேகேஆர் உள்ளிட்ட உலக முன்னணி நிறுவனங்கள் ரூ.1,15,693.95 கோடிக்கு வாங்கின. இதனால் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்தது. பங்கு சந்தைகளிலும் அவரது பங்கு மதிப்புகள் உச்சத்தை தொட்டன. இதன் காரணமாக அம்பானி சொத்த மதிப்பு 28 பில்லியன் டாலர் உயர்ந்து, மொத்தம் 64.5 பில்லியன் டாலர் ஆனது. இந்திய மதிப்பில் இது ரூ.4.9 லட்சம் கோடியாகும். இதனை அடுத்து அந்த நேரத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முகேஷ் அம்பானி இடம்பிடித்தார்.

அதிக முதலீடுகள் மூலம் லாபம் ஈட்டிய அம்பானி உலகின் தலை சிறந்த முதலீட்டாளரும் மில்லியனுருமான வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளினார். சில நாட்களுக்கு முன்பு புளூம்பெர்க் வெளியிட்டுள்ள பணக்காரகள் பட்டியலின்படி, அம்பானி 68.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 8 வது இடத்திலும், 67.8 பில்லியன் டாலருடன் வாரன் பஃபெட் 9தாவது இடத்திலும் இருந்தனர். 7வது இடத்தில் கூகுளில் சர்ஜே பிரின் இருந்தார். 3 பேரையும் பின்னுக்குத் தள்ளி டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 7 வது இடத்தை பிடித்துள்ளார். 

70.5 பில்லியன் டாலருடன் 8வது இடத்தைப் பிடித்துள்ளார் எலான். இதனால் அம்பானி 9 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த மாதம் எட்டாவது இடத்தில் இருந்த வாரன் பஃபெட் 2.9 பில்லியன் டாலரை அறக்கட்டளைக்கு கொடுத்ததால் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.