முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக குறைந்துள்ளது என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் சேர்ந்த முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடும் வீழ்ச்சியடைந்துள்ளது என மத்திய புள்ளியியல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் “ 2019-20 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியான ( ஜிடிபி ) 5% ஆக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சரிவு எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவிதமாக இருந்த நிலையில், தற்போது 5% ஆக வீழ்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி 2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஜிடிபி வளர்ச்சியை 6.9% உயர்த்த திட்டமிட்டிருந்தது. அத்துடன் இரண்டாம் பாதியில் 7.3 முதல் 7.5% உயர்த்தவும் திட்டம் வகுத்திருந்தது.