வணிகம்

சோப்புகளுக்கு விலை குறைந்தது

Rasus

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலானதை தொடர்ந்து சோப்பின் விலை கணிசமாக குறையத் தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி கடந்த 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஜிஎஸ்டி-யில் சோப்பு, ஹேர் ஆயில், பற்பசை ஆகியவற்றின் வரி ஏற்கனவே இருந்த 24-25 முதல் சதவிகிதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சோப்பு விலை வெகுவாக குறைந்துள்ளது.

இந்தியாவின் மிக பெரிய வேக நுகர்வு பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் டவ், லைப்பாய், லக்ஸ், பியர்ஸ் ஆகியவற்றின் விலையை வெகுவாக குறைத்துள்ளது. அதேபோல், கோத்ரேஜ் தயாரிப்பான சிந்தால், விப்ரோ தயாரிப்பான யார்லி ஆகிய சோப்புகளின் விலையையும் அந்தந்த நிறுவனங்கள் குறைத்துள்ளன. யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், இமாமி, ஆகிய நிறுவனங்களும் தங்களது தயாரிப்பு பொருட்களுக்கு வரிக்கேற்ப விலையை குறைத்துள்ளன. 

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சோப்புகளுக்கு ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், விலையை குறைத்திருந்தாலும், புதிதாக தயாரிக்கும் சோப்புகளுக்கு விலையை குறைக்காமல் சோப்பின் அளவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.