பெட்ரோல் பங்க்களில் இன்று நள்ளிரவு முதல் கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பெட்ரோல் முகவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிரெடிட், டெபிட் கார்டு மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனைக்கு வங்கிகள் ஒரு சதவிகிதம் வரி விகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கார்டுகள் மூலம் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணம், வங்கியிலிருந்து தங்களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் பெட்ரோல் முகவர்கள் சங்கம் கூறியுள்ளது. இதில் தலையிட்டு தீர்வு காணுமாறு எண்ணெய் நிறுவன அதகாரிகளை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்டுகள் மூலமான பணப் பரிவர்த்தனையால் தங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை ஏற்க முடியாது என்றும், எனவே, இன்று நள்ளிரவு முதல் கிரெடிட், டெபிட் கார்டுகளை ஏற்பதில்லை என்றும், தமிழ்நாடு பெட்ரோல் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.