வணிகம்

இந்த லிஸ்ட பாருங்க... தீபாவளி ஆஃபர்களை அதிரடியாய் அள்ளிவீசும் இணையதளங்கள்...!

இந்த லிஸ்ட பாருங்க... தீபாவளி ஆஃபர்களை அதிரடியாய் அள்ளிவீசும் இணையதளங்கள்...!

webteam

அடுத்தவாரம் தீபாவளி பண்டிகை வர இருக்கும் நிலையில் ஆன்லைன் மூலமாக பொருட்களை விற்கும் பிரபல இணையதளங்கள் ஆஃபர்களை அள்ளி வீசியிருக்கின்றன. அந்த ஆஃபர்கள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

13,000 ரூபாய்க்கு எல்.இ.டி. ஸ்மார்ட் டிவி.

ரியல்மீ நிறுவனத்தின் 32 அங்குல எல்.இ.டி டிவி முன்னதாக 13,999 ரூபாய் க்கு விற்கப்பட்ட நிலையில், பண்டிகை காலச்சிறப்பு சலுகையாக தற்போது 12,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் அந்தச் சலுகையை பெற நீங்கள் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் கிரெடிட் கார்டு வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளராக இருக்க வேண்டும். இதனை நீங்கள் ரியல்மீயின் அதிகாரப்பூர்வ தளத்திலும் வாங்கலாம்.

கூடவே அங்கு எக்ஸ்சேஞ் ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. ப்ளிப்கார்டு இணையதளத்தில் எக்ஸ்சேஞ் பொருட்களுக்கான கழிவு விலையானது 11,000 வரை
வழங்கப்பட்டுள்ளது.

55 அங்குல நோக்கியா 4 கே ஸ்மார்ட் டிவி

இந்தியாவில் முன்னதாக 41,999 ரூபாய்க்கு விற்கப்பட்ட 55 அங்குல நோக்கியா 4 கே ஸ்மார்ட் டிவி தற்போது 39,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஜே.பி.எல் ஆடியோ டெக்னாலாஜியுடன், 24 வார்ட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டதாக இருக்கும் இந்த டிவியானது 2.25 ஜிபி ரேமைக் கொண்டது. அதே போல 55 அங்குல எம்.ஐ நிறுவனத்தின் டிவி 4 எக்ஸ் 36,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஸ்மார்ட்போன் கைக்கடிகாரங்கள்

எம்.ஐ.பேண்ட் 5 கைக்கடிகாரம் உடற்பயிற்சியில் ஆர்வமிக்கவர்களுக்கு ஆதர்ச நண்பனாக வலம் வருகிறது. நீங்கள் 5000 ரூபாய்க்கும் கீழாக இது போன்ற கைக் கடிகாரங்களை வாங்க நினைத்தால் எம்.ஐ. கடிகாரத்தை வாங்கலாம். அமேசான் மற்றும் எம்.ஐ இணையதளங்களில் கிடைக்கும் இந்தக் கைக்கடிகாரம் தற்போது 2,499 ரூபாய்க்கு கிடைக்கிறது. கலர் டிஸ்ப்ளே, டச் வசதி, வாட்டர் ரெசிஸ்டண்ட், யோகா சார்ந்த பயிற்சிகளை ட்ராக் செய்தல் போன்ற வசதிகளும் இதில் அடக்கம்.

ஹூவாய் வாட்ச் ஜிடி 2

இந்தக் கைக்கடிகாரம் 12,990 ரூபாய்க்கு கிடைக்கிறது. 4.6 செ.மீ நீளம் கொண்ட இந்தக் கடிகாரம் 1.36 அங்குல டிஸ்ப்ளே வசதியைக்கொண்டது. இதில் ஓடுதல், நடத்தல், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட 15 வகையான உடற்பயிற்சிகளை ட்ராக் செய்யும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் தூங்கும் போது உங்களில் இதயத்துடிப்பை அளவீடும் வசதியும் இதில் கிடைக்கிறது.

ஃபிட் பிட் வெர்சா 2

இந்தக் கைக்கடிகாரமும் உடற்பயிற்சியிக்கான உற்ற நண்பனாக இருக்கிறது. முன்னதாக 20,999 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்தக் கடிகாரம் தற்போது ப்ளிப்கார்ட் இணையதளத்தில் 12,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. டச் வசதி கொண்ட இந்தக் கடிகாரத்தில் 300 பாடல்கள் இலவசமாக கிடைக்கிறது.


ஹெட் செட்டுகள்:

வையர் லெஸ் ஹெட்செட்டை நீங்கள் விரும்புபவரானால், ரியல்மீ பட்ஸ் வையர்லெஸ் ப்ரோ சிறந்த தேர்வாக இருக்கலாம். ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இந்த ஹெட்செட் 2,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 22 மணி நேர பேட்டரி சேவையை வழங்கும் இந்த ஹெட்செட்டில் அதிக இரைச்சலை குறைக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

அமேசான் எஃகோ டாட்

முன்னதாக 5,499 ரூபாய்க்கு விற்கப்பட்ட இதன் விலை தற்போது 2,249 ரூபாய்க்கு கிடைக்கிறது. பேபரிக் வடிவமைப்பு துல்லியமான ஓசையை அளிக்கிறது.

கிண்டில் (10 ஜெனரேசன்)

கிண்டில் ஐப்பேடு (10 ஜெனரேசன்) தற்போது 6,499 ரூபாய்க்கு அமேசான் இணையதளத்தில் கிடைக்கிறது. 6 அங்குல டிஸ்ப்ளே, வைஃபை வசதிகளை உள்ளடக்கிய கிண்டிலின் முன்பக்கத்தில் சரிசெய்யக்கூடிய ஒரு லைட் வசதியும் இருக்கிறது. நீங்கள் அமேசான் ப்ரைம் பயனாளாராக இருப்பின் நீங்கள் அமேசான் தளத்தில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை இலவசமாக படித்துக்கொள்ளலாம். ஆனால் இதில் ஆடியோ புத்தகங்களை கேட்க முடியாது.