Go First twitter
வணிகம்

"டிக்கெட் விற்பனை, முன்பதிவு எதுவுமே கூடாது" - Go First ஏர்லைன்ஸுக்கு DGCA அதிரடி உத்தரவு

கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடி காரணமாக திவால் ஆனதாக அறிவித்தது

Jagadeesh Rg

மறு உத்தரவு வரும் வரை நேரடியாகவோ மறைமுகமாகவோ முன்பதிவு செய்தல் கூடாது என்றும் மற்றும் டிக்கெட் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு Go First Airlines-க்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டுள்ளது

இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்திற்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் , பாதுகாப்பான நம்பகமான முறையில் சேவையைத் தொடரத் தவறியதற்காக மறு உத்தரவு வரும் வரை கோ பர்ஸ்ட் நிறுவனம் நேரடியாகவோ மறைமுகமாகவோ டிக்கெட் முன்பதிவு மற்றும் விற்பனை செய்யக் கூடாது என்றும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் உத்தரவிட்டுள்ளது.

Go First

கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடி காரணமாக திவால் ஆனதாக அறிவித்தது. மேலும், மே 15 ஆம் தேதி வரை விமானம் ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.