வணிகம்

அதிகரிக்கிறது மொபைல் ஃபோன் பரிவர்த்தனைகள்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்

அதிகரிக்கிறது மொபைல் ஃபோன் பரிவர்த்தனைகள்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்

webteam

இன்னும் 4 வருடங்களில் டெபிட், கிரடிட் மற்றும் ஏடிஎம்கள் பயனற்றுப் போக வாய்ப்புள்ளதாக நிதி ஆயோக் தலைமை அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகம் அமிதாப் காந்துக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது.

இதை பெற்றுக்கொண்ட பின் பேசிய அவர், ’இன்னும் 4 ஆண்டுகளில் டெபிட், கிரடிட் மற்றும் ஏடிஎம்கள் தேவையில்லாமல் போய்விடும். எல்லா பரிவர்த்தனைகளும் மொபைல் ஃபோன் மூலமாகவே நடைபெறும். மொபைல் ஃபோன் மூலமாக வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது இப்போது இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது’ என்றார்.