2025-ம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியா மாறவேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால், 2030-ம் ஆண்டில்தான் இந்த இலக்கை எட்ட முடியும் என டிபிஎஸ் கணித்திருக்கிறது. 2030-ம் ஆண்டில்தான் இந்த இலக்கை இந்தியா எட்டுவது சாத்தியமாகும் என தெரிவித்திருக்கிறது.
5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்துக்கு பல விஷயங்கள் தேவை. முதலாவது விவசாயத்தில் இருந்து பலரையும் தொழில் துறைக்கு மாற்ற வேண்டும். இந்தியாவில் அதிக சதவீத மக்கள் விவசாயத்தை சாரந்து இருக்கிறார்கள். இதனைக் குறைத்து, அவர்களுக்கு வேறு வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதேபோல நகர்புற கட்டமைப்பு மிகவும் பலமாக இருக்க வேண்டும்.
பொருளாதார அடிப்படையில் பார்த்தால் 2030-ம் ஆண்டு வரையில் டாலர் அடிப்படையிலான ஜிடிபி தொடர்ந்து ஏழு சதவீதமாக இருக்க வேண்டும். அதற்கு ரூபாய் மதிப்பு சீராக இருக்க வேண்டும். பணவீக்கம் மூன்று சதவிதம் என்னும் அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான வளர்ச்சி (Real Growth) 4 சதவீத அளவிலாவது இருக்கும். அடுத்த சில ஆண்டுகளுக்கு இவை சாத்தியமானால் மட்டுமே 5 ட்ரில்லியன் டாலர் என்பது 2030-ல் சாத்தியம்.
தற்போது இந்தியர்களின் சராசரி வருமானம் ஆண்டுக்கு 2100 டாலர். அடுத்த பத்தாண்டுகளில் சீராக 7 சதவீத வளர்ச்சி இருக்கிறது என வைத்துக்கொள்ளோம். அதேபோல தற்போது 130 கோடியாக இருக்கும் மக்கள் தொகை அடுத்த பத்தாண்டுகளில் 140 கோடியாக மாறும். அப்போது இந்தியர்களின் சராசரி வருமானம் 3800 டாலராக இருக்கும்.
ஆனால், தற்போது இந்தோனேஷியர்களின் சராசரி ஆண்டு வருமானமே 3,800 டாலருக்கு மேல் இருக்கிறது என டிபிஎஸ் தெரிவித்திருக்கிறது.