வணிகம்

தினமும் ஒரு 'ஸிப்'; உங்களால் முடியுமா? வெற்றி யாருக்கு?

தினமும் ஒரு 'ஸிப்'; உங்களால் முடியுமா? வெற்றி யாருக்கு?

webteam

நண்பர்களுடன் டீ கடையில், அடுத்து பார்ட்டிகளில் அதிக புழக்கத்தில் இருக்கும் இந்த சொல், இப்போது முதலீட்டு உலகையும் ஆக்கிரமித்துள்ளது. தமிழில் ஸிப் எனவும், ஆங்கிலத்தில் Systamatic Investment Plan அதாவது SIP என சுருக்கமாகவும் குறிப்பிடப்படும் முதலீட்டு திட்டம் ஒருவரை தொடர்ந்து முதலீடு செய்ய வைக்க அறிமுகமானதுதான். தொடங்கியபோது பெருமளவு மாதந்தோறும் சேமிப்பு என்று இருந்த இந்தத் திட்டம், தற்போது தினமும் என முன்னேற்றம் கண்டுள்ளது. மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட தொகையை, தொடர்ந்து ஒரே திட்டத்தில் முதலீடு செய்யும்போது, அது POWER OF COMPOUNDING என சொல்லப்படும், கூட்டு வட்டி அடிப்படையில் கூடுதல் பலன்களைத் தருகிறது என்கிறார்கள் நிபுணர்கள். 

சேமிக்க என்றால், அதற்கு வருமானம் வேண்டுமே!... அதனால், மாத சம்பளக்காரர்களுக்கு ஏற்ற வகையில் தொடங்கிய மாதாந்திர சேமிப்பு திட்டங்கள்தான் SIP என பொருள் கொள்ளும் அளவுக்கு மாறியிருந்தது. ஆனால், அப்போது அன்றாட வருவாய் பெறும் தரப்பினரை மனதில் வைத்து - அது, வணிகர்களாகவோ, அன்றாட வருவாய் பெறும் தினக்கூலி தொழிலாளர்களோ... எப்படியானாலும், அவர்கள் கைக்கு பணம் வந்ததும் சேமிக்க வேண்டும் என அவர்களைத் தூண்ட, 2 இந்திய மியூச்சுவல் ஃபண்ட்கள் அன்றாட 'ஸிப்'களைத் தொடங்கியுள்ளன. அவை - எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஹெச்டிஎப்சி மியூச்சுவல் ஃபண்ட், இந்தத் திட்டங்களை அன்றாட வருவாய் பெறும் வணிகர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்... அல்லது புறக்கணிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே மற்ற மியூச்சுவல் ஃபண்ட்கள் இதை அணுகும் என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்.

கையில் இருக்கும் பானம் டீயோ... காபியோ... மற்றவையோ...! மெல்ல, 'ஒவ்வொரு ஸிப்பாக' அதைப் பருகுவது போல, முதலீட்டிலும் 'தினமும் ஒரு ஸிப்!' வெற்றி பெருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.