வணிகம்

வெளிநாட்டு டிவிக்கான சுங்கவரி இருமடங்கு உயர்வு

வெளிநாட்டு டிவிக்கான சுங்கவரி இருமடங்கு உயர்வு

Rasus

வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்ஃபோன், டிவிக்கான சுங்கவரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டிவி உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களுக்கான சுங்க வரி 10 சதவிகிதமாக உள்ளது. அது  மேலும் 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டு தற்போது 20 சதவிகிதமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகையை பொருட்களை தனிநபரோ, அல்லது நிறுவனங்களோ இறக்குமதி செய்யும் பட்சத்தில் இந்த 20 சதவிகித சுங்க வரி பொருந்தும். வாட்டர்ஹீட்டர்கள், மானிட்டர்கள், புரொஜக்டர்களுக்கான வரி 10-ல் இருந்து 20 சதவிகிதமாக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களுக்கான இறக்குமதி வரி பூஜ்ய சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் தொழில்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்கவும், மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிவி, செல்ஃபோன் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், அதன் மீதான சுங்க வரி அதிகரிப்பை ஒருவேளை மக்களிடையே திணிக்கலாம் அல்லது அந்தந்த நிறுவனங்களே சுங்கவரி அதிகரிப்பை ஏற்றுக்கொள்ளலாம்.