உலகில் அதிக பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 45 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பெட்ரோலிய துறை அமைச்சகத்திடம் இருக்கும் புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.கடந்த 2011ஆம் ஆண்டில் இந்தியாவில் 41 ஆயிரத்து 947 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இருந்தன. நிகழ்வாண்டில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்து 799 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5,474 பெட்ரோல் நிலையங்கள் தனியாருக்கு சொந்தமானவை என்று கூறப்பட்டுள்ளது.
எஸ்ஸார் ஆயில் நிறுவனங்கள் அதிக அளவில் பெட்ரோல் விற்பனை நிலையங்களை வைத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல் உலகில் அதிக பெட்ரோல் விற்பனை நிலையங்களை வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்தப்படியாக 3 ஆவது இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.