செமிகன்டக்டர்களுக்கு பற்றாக்குறை நிலவியபோதும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சென்ற நிதியாண்டில் சுமார் 31 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளன.
இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவிகிதம் அதிகமாகும். டாடா மோட்டார்ஸ், கியா, ஸ்கோடா உள்ளிட்ட பல வாகன உற்பத்தியாளர்கள் கடந்த ஆண்டு சிறந்த வருடாந்திர விற்பனையை பதிவு செய்துள்ளன. இருப்பினும், ஒட்டுமொத்த வாகன உற்பத்தித்துறையின் விற்பனை முந்தைய 2019-ஆம் நிதியாண்டில் விற்கப்பட்ட 33 லட்சம் வாகனங்களை விட குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், சென்ற மார்ச் மாதத்தில் மாருதி சுசுகி, ஹூண்டாய் மோட்டார் ஆகிய நிறுவனங்களின் கார்கள் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளன. இதற்கு மின்னணு பாகங்கள் தட்டுப்பாடே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அசோக் லேண்ட் நிறுவனத்தின் வர்த்தக வாகன விற்பனை 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது.