வணிகம்

'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' மாநாட்டை நாளை துவக்கி வைக்கிறார் முதல்வர்

Sinekadhara

'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' என்ற மாநாட்டை நாளை முதல்வர் துவக்கி வைக்கிறார். நாளை காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி கையேட்டை முதலமைச்சர் வெளியிடவுள்ளார். மேலும், பிளிப்கார்ட் நிறுவனம் மூலம் 2 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தமும், இதே போல, சுமார் 240 கோடி மதிப்பிலான சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவுள்ளது.

இங்கு நடைபெறும் கண்காட்சியில், பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனங்கள் தமது பொருட்களை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளனர். மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் இறையன்பு, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்பட உயர் அதிகாரிகளும், வர்த்தக நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.