வணிகம்

செப்டம்பர் மாதத்திலும் சரிந்த வாகன விற்பனை

webteam

நாட்டின் வாகனத்துறையின் விற்பனை வீழ்ச்சி செப்டம்பர் மாதத்திலும் தொடர் கதையாகியுள்ளது.

முன்னணி கார் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் விற்பனை குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளன. செப்டம்பரில் உள்நாட்டு கார் விற்பனை 26.7% குறைந்து 1 லட்சத்து 12 ஆயிரத்து 500 ஆகியுள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. இதே போல ஹுண்டாய் நிறுவனமும் தங்கள் உள்நாட்டு கார் விற்பனை 14.8% குறைந்து 40 ஆயிரத்து 705 ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் செப்டம்பரில் 14 ஆயிரத்து 333 வாகனங்களை மட்டுமே விற்றுள்ள நிலையில் இது முந்தைய ஆண்டின் செப்டம்பர் விற்பனையை காட்டிலும் 33% குறைவு என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

டொயோட்டோ நிறுவனத்தின் விற்பனை 18% குறைந்து 10 ஆயிரத்து 203 ஆகியுள்ளது. ஹோண்டா கார் நிறுவனத்தின் விற்பனை 37.24% குறைந்து 9 ஆயிரத்து 301 ஆக இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் 8 ஆயிரத்து 97 வாகனங்களை மட்டுமே விற்றுள்ள நிலையில் இது 56% வீழ்ச்சி என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பண்டிகைக் காலம் மற்றும் அரசின் சலுகை அறிவிப்புகளால் அக்டோபர் மாதத்தில் வாகன விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அத்துறை நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன