துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்புகளின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு விலக்கிக் கொண்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
உள்நாட்டில் பருப்பு ரகங்களின் உற்பத்தி உயர்ந்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையில் ஏற்றுமதி அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வாரியம் தெரிவித்துள்ளது. எனினும், செயற்கை உரம், பூச்சி மருந்து கலக்காத முற்றிலும் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பருப்பு ரகங்கள், சென்னா கடலை ஆகியவை மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.