'அனைவருக்கும் வீடு' என்னும் திட்டத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏதுவாக வரிச்சலுகைகளும் இருக்க வேண்டும் என வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் கருதுகின்றன. பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், வரிச்சலுகையும் உயர்த்த வேண்டும்.
வீட்டுக்கடனுக்கு செலுத்தப்படும் வட்டியில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வரிச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரம்பினை ரூ.3 லட்சமாக உயர்த்தலாம். பெரு நகரங்களில் இந்தத் தொகையை மேலும் உயர்த்தும்போது, நகரங்களில் உள்ள விலைக்கு ஏற்ப வரிச்சலுகை இருக்கும்.
அதேபோல 80சி பிரிவில் வீட்டுக்கடனுக்கான அசலில் வரிச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையும் உயர்த்தும் பட்சத்தில் வீடு வாங்க திட்டமிடுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இதுபோல பல சலுகைகளை ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றனர். நாளை (பிப்.1) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுமா என்பது தெரிந்துவிடும்.