பார்தி ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களை சேர்ப்பதில் முதல் முறையாக ஜியோவை மிஞ்சியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக வாடிக்கையாளர்களை சேர்ப்பதில் மெதுவாக சரியத் தொடங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் முதல் டெலிகாம் நிறுவன சந்தைகளில் ஜியோவின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், முதல் முறையாக பார்தி ஏர்டெல் நிறுவனம் ஜியோவை விட அதிகளவில் புதிய வாடிக்கையாளர்கள் தனது சேவையில் இணைத்துள்ளது.
கோல்ட்மேன் சேக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 26 லட்சம் பேர் இணைந்துள்ளனர். ஆனால், ரிலையன்ஸ் ஜியோவில் 4 லட்சம் பேர் மட்டுமே இணைந்துள்ளனர்.
ஜியோவில் கட்டண சேவைகள் தொடங்கியுள்ளதால் வரும் மாதங்களில் இன்னும் வாடிக்கையாளர்கள் இணைவதில் சிக்கல் ஏற்படலாம் என்றும், பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் இணைவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், ஜியோ நிறுவனம் புதிய சலுகைகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.