நாட்டிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் 34 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அதிவேக இணையதள வசதி தரும் பாரத் நெட் திட்டத்தின் 2வது கட்ட பணிகள் இன்று தொடங்குகின்றன.
இத்தகவலை தொலைத்தொடர்புச் செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்தார். 2வது கட்டத்தில் ஒன்றரை லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணையதள இணைப்பு தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முதல் கட்டத்தில் ஒரு லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி தரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் இது டிசம்பர் மாதம் நிறைவு பெறும் என்றும் அருணா சுந்தரராஜன் தெரிவித்தார்.
பாரத் நெட் திட்டம் வரும் 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்