இந்தியாவில் வாய்ஸ் மற்றும் டேட்டா சலுகைகளுக்கு 'பேஸ் ரேட்' நிர்ணயம் செய்யக் கோரிய முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்தியாவில் வாய்ஸ் கால்ஸ் மற்றும் மொபைல் டேட்டா சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களில் குறைந்தபட்ச அளவு ஒன்றை நிர்ணயம் செய்ய நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு, மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக டிராயிடம் விளக்கம் அளிக்கும் விதமாகவும், குறைந்த பட்ச விலையை நிர்ணயம் செய்ய ஆதரவளித்தும் ஐடியா செல்லுலார் அறிக்கை ஒன்றை சமர்பித்திருந்தது. முன்னணி நிறுவனங்கள் குறைந்த பட்ச தொகையை நிர்ணயம் செய்யக் கோரிக்கையை ரிலையன்ஸ் ஜியோ ஏற்றுக்கொள்ளாத நிலையில், முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு எதிராகவே செயல்பட்டு வந்தது.
இன்டர்னெட் பயன்பாட்டு தொகையை தள்ளுபடி செய்யக் கோரி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கோரி வரும் நிலையில், ஏர்டெல் மற்றும் இதர நிறுவனங்கள் இந்த தொகையை உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளன. மேலும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு இன்டர்னெட் வழங்குவதால் ஒரு காலாண்டிற்கு மட்டும் ரூ.550 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.