பாரத ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து சேமிப்புக் கணக்கு வட்டியை மற்றொரு பொதுத் துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவும் அரை சதவிகிதம் குறைத்துள்ளது.
ஒரு கோடி ரூபாய்க்கு கீழான சேமிப்புத் தொகைக்கான வட்டி 4 சதவிகிதத்திலிருந்து 3.5 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக பாரத ஸ்டேட் வங்கி சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் 50 லட்ச ரூபாய் வரையான இருப்பு வைக்கப்படும் சேமிப்புக் கணக்குக்கு வட்டி 4 சதவிகிதத்தில் இருந்து மூன்றரை சதவிகிதமாக குறைக்கப்படுவதாக வங்கியின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் பேங்க் ஆப் பரோடா தெரிவித்துள்ளது. ஆண்டின் சராசரி இருப்புத் தொகை 50 லட்சத்துக்கு மேல் இருந்தால், 4 சதவிகித வட்டி தொடரும் என்றும் அவ்வங்கி கூறியுள்ளது.