வணிகம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பைக் விற்பனை விகிதம் ஜனவரி மாதத்தில் 16 சதவீதம் உயர்வு

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பைக் விற்பனை விகிதம் ஜனவரி மாதத்தில் 16 சதவீதம் உயர்வு

webteam

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை சதவீதம் ஜனவரி மாதம் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், 3,32,342 இரு சக்கர வாகனங்களை விற்ற நிலையில், இந்தாண்டு ஜனவரி மாதம் 3, 84,936 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் இரு சக்கர வாகன விற்பனை சதவீதம் 16 % உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1,74, 546 இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு ஜனவரி மாதம் 2,27,532 இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் இரு சக்கர வாகன ஏற்றுமதி சதவீதம் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக புனேவில் அமைந்துள்ள நிறுவனத்திலிருந்து அதிகப்படியான இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த உள்நாட்டு விற்பனையை பொருத்த வரை, கடந்த ஆண்டு இதே மாதம் 1,57,796 வாகனங்கள் விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 1,57,404 வாகனங்களே விற்கப்பட்டுள்ளது.

ஆனால், வாகன விற்பனையை பொருத்த வரையில் நிறுவனத்தின் விற்பனை சதவீதம் கடந்த மாத நிலவரப்படி 30 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதம் 62,131 வாகனங்கள் விற்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 40,263 வாகனங்களே விற்கப்பட்டுள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அண்மையில் ஏப்ரல் - டிசம்பர் மாதங்களில் அதிகளவு இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்ததில் முதன்மை நிறுவனமாக இருப்பதாக கூறியது. அந்தமாத கால இடைவெளியில் அந்த நிறுவனம் கிட்டத்தட்ட 12,36,617 இரு சக்கர வாகனங்களை  வெளிநாட்டு சந்தைக்கு அனுப்பியுள்ளது.