இந்திய நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான பஜாஜ் நிறுவனம் புனேவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான ஆலையை அமைக்கவுள்ளது. இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் முதன்முதலில் என்ட்ரி கொடுத்து பஜாஜ் நிறுவனம்தான். கடந்த ஆண்டு செட்டாக் (Chetak) எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்திருந்தது.
இந்த நிலையில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான ஆலையை அமைக்கிறது. ஓலா, Ather, சிம்பிள் ஒன் மாதிரியான நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் சவால் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலையில் ஆண்டுக்கு 5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது பஜாஜ். அதற்காக சுமார் 300 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாம். வேண்டுமானால் கூடுதலாக 250 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். வரும் 2022 ஜூன் முதல் இந்த ஆலையில் உற்பத்தியாகும் வாகனங்கள் சந்தைக்கு வரும் எனத் தெரிகிறது.