வணிகம்

திவால் ஆகிறது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்!

திவால் ஆகிறது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்!

webteam

கடனை திருப்பி செலுத்த முடியாததால் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவால் ஆகிறது.

ரியலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உரிமையாளர் அனில் அம்பானி, கடன் பிரச்னையில் சிக்கி தவித்து வருகிறார். ஜியோ வின் அறிமுகத்தால் இவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடும் சரிவை கண்டது. இதனால் அந்நிறுவனம் மீது டெலிகாம் சாதனங்களை உற்பத்தி செய்யும் ஸ்வீடன் நாட்டின் எரிக்ஸன் நிறுவனம் தேசிய சட்ட தீர்ப்பாயத்தில் புகார் அளித்தது. அதில், அனில் அம்பானியை கைது செய்து தங்களுக்கு சேர வேண்டிய ரூ.550 கோடியை திருப்பி செலுத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்குத் தொடரப்பட்ட நிலையில், திவாலானதாக அறிவிக்க ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் கடன்களை திருப்பி செலுத்துவதற்காக, சொத்துகளை விற்க 2017-ம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது. இன்னும் அதை விற்க முடியவில்லை. இதனால், கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை.

இதுபற்றி கம்பெனி இயக்குனர்கள் குழு ஆலோசனை நடத்தியது. அதில், கம்பெனியை திவால் ஆனதாக அறிவிக்க, மும்பை யில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தை அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளது.