வணிகம்

ஃபோர்டு இழப்பீடு தொகை விவகாரத்தில் உடன்பாடு... ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தொகை தெரியுமா?

ஃபோர்டு இழப்பீடு தொகை விவகாரத்தில் உடன்பாடு... ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தொகை தெரியுமா?

webteam

ஃபோர்டு இழப்பீட்டு தொகை விவகாரம் சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது. சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாபதி தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதாக தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மிக முக்கிய கார் தயாரிக்கும் நிறுவனமாக ஃபோர்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வந்த கார் உற்பத்தி செய்யும் சென்னை ஃபோர்டு தொழிற்சாலையானது கடந்த 10 ஆண்டுகளாக இழப்பை சந்தித்து வருவதாகக் கூறி தொழிற்சாலையை கடந்த வருடம் ஜூன் மாதம் மூடப் போவதாக நிர்வாகம் அறிவித்தது.

தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் இழப்பீடு தொகை நிர்வாகம் சார்பில் சுமார் 68 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் இழப்பீடு தொகை நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்டால், வருடத்திற்கு 215 நாட்கள் என கணக்கு செய்து கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், குறைந்தபட்சம் 185 நாட்கள் ஆவது, கொடுத்தே தீர வேண்டும் என தொழிற்சங்கத்தினர், கூறிவந்தனர்.

ஃபோர்டு தொழிற்சாலை சார்பில், 130 நாட்கள் இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. VSS SCHEME என்ற பெயரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் இதற்கு, விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஊழியர் ஒருவருக்கு 33 லட்ச ரூபாயிலிருந்து , அதிகபட்சமாக 85 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என கூறப்படுகிறது. இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்து பேச்சுவார்த்தையானது.

நேற்று சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாபதி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது சமூக தீர்வு எட்டப்பட்டதாக தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தரப்பு பேச்சுவார்த்தையில், ஒவ்வொரு பணி முடித்த ஆண்டுக்கும் சராசரியாக 140 நாட்கள் ஊதியம் அளிக்கப்படும் எனவும், மேற்கண்டவைக்கு கூடுதலாக ஒரு முறை மட்டும் சிறப்பு தொகையாக தலா 1.5 லட்சம் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தீர்வு தொகுதியாக வழங்க நிர்வாகம் சம்பந்தம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக பத்து நாட்களுக்கான தீர்வு தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.